close
Choose your channels

பிக்பாஸ் ஃபைனலில் ஓவியா: வெளியான புதிய ஸ்டில்கள்

Saturday, September 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று அனைத்து போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பிக்பாஸ் சூப்பர் ஸ்டார் ஓவியாவும் இதனை சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவின்போது உறுதி செய்தார்.

இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த இறுதிநாளின் நிகழ்ச்சி குறித்த ஸ்டில்களும் வெளிவந்துள்ளது. அதில் ஓவியாவின் புகைப்படமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவியா உள்பட அனைத்து பங்கேற்பாளர்களும் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளதால் அந்த வீடே கலகலப்பாக இருப்பதாகவும், குறிப்பாக ஓவியாவை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவில் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.