close
Choose your channels

'போலீஸ் பத்தி அவதூறு கிளப்புறதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்கு': பா ரஞ்சித்தின் அடுத்த பட டிரைலர்!

Wednesday, December 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அடுத்த படமான ’ரைட்டர்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் திலீபன், இனியா, ஹரிகிருஷ்ணன், அன்புதுரை, சுப்பிரமணியம் சிவா உள்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிராங்கிளின் ஜேகப் என்பவர் இயக்கியுள்ளார் என்பவரும் பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவில் மணிகண்டன் சிவகுமார் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்நிலையத்தில் ரைட்டர் பணிபுரியும் சமுத்திரக்கனியை காவல்துறை உள்ளவர்களே அவமானப்படுத்துவதும் அந்த அவமானத்தை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதும் இந்த படத்தின் கதை என்பது இந்த இரண்டு நிமிட டிரைலரில் இருந்து தெரியவருகிறது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு வசனமும் மிகவும் அருமை என்பதும், அதில் ’போலீஸ் பத்தி அவதூறு கிளப்புறதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்கு’ என்ற வசனம் இன்றைய சூழலுக்கு பொருத்தமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமுத்திரக்கனி மிகவும் வித்தியாசமான இதுவரை ஏற்காத புதுவிதமான கேரக்டரில் நடித்து உள்ளது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை டிரைலரில் அசத்தலாக இருக்கும் நிலையில் படத்திலும் மிக அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.