close
Choose your channels

40 வயதிலும் மேஜிக் நடக்கும்… செம ஹாட் நீச்சல் உடை போட்டோ ஷுட் நடத்திய சென்னை அழகி!

Tuesday, May 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக அளவில் பிரபலமான அமெரிக்கா டாப் செஃப் ரியாலிட்டி ஷோவை தொகுத்துவழங்கி வரும் பத்மா பார்வதி லக்ஷ்மி என்பவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதும் இவர் உலக அளவில் பிரபலம் என்பதும் ரசிகர்களுக்குத் தெரிந்த ஒன்று. இந்நிலையில் சமீபத்தில் அவர் விளையாட்டு இதழ் ஒன்றுக்கு நடத்தியுள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் படு வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பிறந்து வளர்ந்து பத்மா லெக்ஷ்மி என்பவர் தனது சிறிய வயதிலேயே அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்குள்ள பிரபல பல்கலைக் கழகங்களில் பயின்ற அவர் தனது 20 வயது முதலே மாடலிங் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவரை பல தமிழ் ரசிகர்கள் சென்னை அழகி என்றே சொல்லி பழகியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபல சமையல் கலைஞராகத் தன்னை வளர்த்து கொண்ட பத்மா லெக்ஷ்மி தொடர்ந்து சமையல் கலை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது, அதோடு சமையல் கலை புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதுவது என்பது தன்னை மென்மேலும் வளர்த்துக் கொண்டுள்ளார். மேலும் ஸ்டீவன்ஸ் ஜான்சன்ஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட பத்மா தொடர்ந்து தொண்டு நிறுவனம் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார்.

இப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொண்டு வரும் பத்மா லெக்ஷ்மி தனது உடல் பராமரிப்பு விஷயத்திலும் முழுகவனம் எடுத்து வருகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் தனது உடலை காட்சிப்படுத்துவது தொடர்பாக அவ்வபோது போட்டோஷுட் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

தற்போது 52 வயதாகும் பத்மா லெக்ஷ்மி Sports illustrated எனும் இதழுக்காக கோல்டன் நிறத்திலான நீச்சல் உடையை அணிந்துகொண்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். இதற்காக யு சாய் எனும் புகைப்படக் கலைஞருடன் டொமினிக் சென்ற பத்மா அங்குள்ள நீரில் நின்றபடியே போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் எல்லோரும் இந்தப் புகைப்படதைப் பாருங்கள்… சில சமயங்களில் நீங்கள் இதுவரை அனுபவித்ததை விட மிகவும் உற்சாகமான ஒரு புதிய கட்டம் 40 வயதிற்குமேல் நடக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோல்டன் நிறத்திலான படு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பத்மா லெக்ஷ்மி 40 வயதிற்கு மேலும் புத்துணர்ச்சி பெற எனது புகைப்படம் ஒரு உந்துகோலாக இருக்கும் எனக் கூறியிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.