close
Choose your channels

நடிகை அனு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'பிதா'. சென்னையில் சிறப்பாக நடைபெற்ற பூஜை..!

Tuesday, April 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அனு முக்கிய வேடத்தில் நடிக்கும் ’பிதா’ என்ற திரைப்படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

எஸ் சுகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் அனு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும் ஆதேஷ் பாலா, சாம்ஸ் உட்பட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா ஒளிப்பதிவில் நரேஷ் இசையில் ஸ்ரீ வத்சன்படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை தயாரிப்பாளர் விச்சூர் எஸ் சங்கர் என்பவர் தயாரிக்கிறார்.

பிரபல டான்ஸ் மாஸ்டர் கலாவிடம் ஆறு ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் சுகன். பின்னர் டான்சில் இருந்து டைரக்ஷன் பக்கம் நுழைந்து இருக்கிறார். உளவுத்துறை, ஜனனம், கலவரம் என்று அடுத்தடுத்து பல ஜனரஞ்சக சித்திரங்களை எடுத்து கடைசியில் 2020– ல் “சுவாதியின் கொலை வழக்கு” வரை பரபரப்பாக இருந்த இயக்குனர் ரமேஷ் செல்வனிடம் உதவி- துணை இணை- இயக்குனர் அந்தஸ்தில் படிப்படியாக அனுபவப் பாடம் படித்து, இன்று தனியாக “பிதா” படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் சுகன்!

இதுவரை எட்டு குறும்படங்கள இயக்கி இருக்கும் எஸ் சுகன் முதல் திரைப்படத்தை இயக்கவிருக்கும் நிலையில் வெற்றிப்படமாக கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.