close
Choose your channels

'பொன்னியின் செல்வன் 2' ரன்னிங் டைம் எவ்வளவு? முதல் பாகத்தை விட அதிகமா? குறைவா?

Sunday, April 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’பொன்னின் செல்வன்’ இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் அதாவது 157 நிமிடங்கள் என்று தகவல் வெளியாகி உள்ளன. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் என்ற நிலையில் முதல் பாகத்தை விட பத்து நிமிடங்கள் இரண்டாம் பாகம் குறைவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் பொன்னியின் செல்வன் கதையில் உள்ள அனைத்து முக்கிய அம்சங்களும் இடம்பெறும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால் முதல் பாகம் போகவே இரண்டாம் பாகம் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.