close
Choose your channels

விஜய்சேதுபதி-டாப்ஸி படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

Saturday, October 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் அவர் தற்போது டாப்ஸியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை பழம்பெரும் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி தற்போது சென்னை திரும்பிவிட்டார். இருப்பினும் விஜய் சேதுபதி அல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பு அக்டோபர் ஐந்தாம் தேதி முடிவடையும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் ஏற்கனவே யோகிபாபு, ரமேஷ் திலக், சுப்பு பஞ்சு, மதுமிதா, தேவதர்ஷினி உள்பட ஒருசில காமெடி நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு காமெடி நடிகர் இணைந்து உள்ளதாக தெரிகிறது

பிரபல தெலுங்கு காமெடி நடிகரான வெண்ணிலா கிஷோர் தற்போது இந்த படத்தில் இணைந்து உள்ளதாகவும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் ராதிகா, ராஜேந்திர பிரசாத், ஜெகபதிபாபு, சுரேஷ் மேனன், உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.