close
Choose your channels

பிரபாஸ் நடித்த 'சலார்' ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு.. ரசிகர்கள் அதிருப்தி..!

Wednesday, September 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின

இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் அதிகாரபூர்வமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் குழுவினர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘சலார்’ படத்தின் போஸ்ட் புரொக்சன்ஸ் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருவதாகவும் ஆனால் குறிப்பிட்ட தேதிக்குள் பணியை முடிக்கவில்லை என்பதால் படத்தின் ரிலீஸ் செய்தியை தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘சலார்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் பிரபாஸ் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்த படத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவிபஸ்ருர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ’கேஜிஎப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.