close
Choose your channels

உங்களுக்கு என் ஜோக் புரியவில்லை என்றால் வளருங்கள்: நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிரகாஷ்ராஜ்..!

Tuesday, August 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்திராயன் 3 விண்கலம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த விமர்சனத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் இஸ்ரோ, சந்திராயன் 3 என்ற விண்கலத்தை அனுப்பியது என்பதும் அதில் உள்ள விக்ரம் லேண்டர் நாளை சந்திரனில் தரையிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க செய்திகள் சமூக வலைதளத்தில் வரும் நிலையில் டீக்கடையில் ஒருவர் டீ ஆற்றுவது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பிரகாஷ்ராஜ் சர்ச்சைக்கு உள்ளானார். இதற்கு பல நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கு பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் ஒரு மலையாளி டீக்கடை வைத்திருப்பார் என்று காமெடியை நினைவுபடுத்தும் விதமாக தான், நிலவிலும் விரைவில் மலையாளி ஒருவர் டீக்கடை வைத்திருப்பார் என்ற ஜோக்கை தான் நான் பதிவு செய்தேன். உங்களுக்கு என்னுடைய ஜோக் புரியவில்லை என்றால் அது உங்கள் பிரச்சனை, வளருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.