close
Choose your channels

பிறந்த நாளில் படுத்து கொண்டே தனுஷ் பாடலை பாடும் பிரியா பவானிசங்கர்: வைரல் வீடியோ

Friday, December 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர், மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் என்பதும் அதன் பின்னர் ’கடைக்குட்டிசிங்கம்’ ’மான்ஸ்டர்’ ’மாபியா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ’பிளட்மணி’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’இந்தியன் 2’ ’பத்து தல’ ‘யானை’ உள்பட சுமார் ஒன்பது படங்களில் ப்ரியா பவனி சங்கர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிசம்பர் 31-ம் தேதியான இன்று பிரியா பவானி சங்கர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனுஷ் அமலாபால் நடிப்பில் உருவான ’வேலையில்லா பட்டதாரி’ படத்தில் இடம் பெற்ற ’போ இன்று நீயாக’ என்ற பாடலை அவர் பாடும் காட்சி உள்ளது. படுக்கையில் படுத்துக்கொண்டே பிரியா பவானி சங்கர் தனது இனிய குரலில் பாடும் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.