close
Choose your channels

'லியோ' திரைப்படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி.. அரசின் அதிரடி உத்தரவு..!

Tuesday, October 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்துள்ள ’லியோ’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு தான் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும் 9 மணிக்கு பதிலாக 7 மணி காட்சிக்கு அரசிடம் அனுமதி கோரலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனால் தமிழக அரசு 7.00 மணி காட்சிக்கு அனுமதி அளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் ’லியோ’ திரைப்படத்திற்கு 7 மணி காட்சிக்கு மாநில அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் 7:00 மணிக்கு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என்பது இன்று அல்லது நாளைக்குள் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ’லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.