close
Choose your channels

திடீரென ரஜினியை சந்தித்த சபாநாயகர்.. என்ன காரணம்?

Monday, June 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை திடீரென சபாநாயகர் தனது மகளுடன் சென்று சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான ’ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாநில சட்டமன்ற சபாநாயகர் செல்வம் அவர்கள் ரஜினிகாந்தை தனது மகள் ஜனனியுடன் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்படுகிறது

மொய்தீன் பாய் என்ற முஸ்லீம் கேரக்டரில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.