close
Choose your channels

பேய் படத்தை கூட வித்தியாசமாக கொடுத்துள்ள பார்த்திபன்.. 'டீன்ஸ்' டீசர்..!

Sunday, March 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பார்த்திபனின் அடுத்த படமான ‘டீன்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி மிரட்டி உள்ளது.

இந்த படம் கதை குறித்த தகவல் கொஞ்சம் கூட கசியாமல் இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரிலிருந்து இது ஒரு பேய் படம் என்பது தெரிய வந்துள்ளது. எந்த ஒரு படத்தையும் வித்தியாசமான கோணத்தில் படமாக்கும் பார்த்திபன் பேய் படத்தைக் கூட வித்தியாசமாக படமாக்கி உள்ளார் என்பது இந்த டீசரில் உள்ள காட்சிகளில் இருந்து தெரிய வருகிறது. மொத்தத்தில் இந்த டீசர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

டி இமான் இசையமைப்பில் கேவ்ரிக் ஆரி ஒளிப்பதிவில், சுதர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் முற்றிலும் புது முகங்கள் நடித்துள்ளனர் என்பதும் இளைய தலைமுறையினர் ரசிக்கும் வகையில் ஒரு திகில் படத்தை பார்த்திபன் கொடுத்திருக்கிறார் என்றும் தெரிகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.