close
Choose your channels

யூடியூப் சேனல் ஆரம்பித்த பிரபல நடிகை… ரசிகர்கள் உற்சாகம்!

Tuesday, February 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு சினிமாவில் அறியப்படும் நடிகையாக இருந்துவருபவர் நடிகை ராஷிகண்ணா. தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ஒருசில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளார். இந்நிலையில் இவர் ரசிகர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு யூடியூப் சேனல் ஆரம்பித்து இருப்பது ரசிகளிடையே புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “இமைக்கா நொடிகள்“ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ராஷிகண்ணா. இவர் ஜெயம்ரவியுடன் இணைந்து “அடங்கமறு“, விஜய்சேதுபதியுடன் “சங்கத்தமிழன்“, சுந்தர்.சி இயக்கிய “அரண்மனை3“ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் கார்த்தியுடன் “சர்தார்“, நடிகர் தனுஷ்ஷுடன் “திருச்சிற்றம்பலம்“, தெலுங்கில் நடிகர் நாகசைதன்யாவுடன் “தேங்க்யூ“ போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் தனது ரசிகர்களுடன் நேரடியாக உரையாட நினைத்த நடிகை ராஷிகண்ணா புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த சேனலில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்களையும் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிரபல நடிகை ஒருவர் யூடியூப் சேனல் ஆரம்பித்து ரசிகர்களிடைய நேரடியாக உரையாட இருப்பதைத் தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.