close
Choose your channels

ஒரே நேரத்தில் 2 படங்களில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் பேத்தி

Friday, July 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா, மிஷ்கின் இயக்கும் படம் ஒன்றில் அறிமுகமாகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அவர் மேலும் ஒரு பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
'மொழி', 'அபியும் நானும்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகன், விரைவில் அருள்நிதி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க தான்யா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தான்யா கூறியபோது, 'இயக்குனர் ராதாமோகனிடம் இருந்து ஆடிஷனுக்கு வருமாறு அழைப்பு வந்ததும், இயக்குனர் மிஷ்கின் அனுமதியோடு நான் ஆடிஷனில் கலந்து கொண்டேன். எனக்கு ராதாமோகன் இந்த படத்தின் கேரக்டருக்கு தயாராக சில ஹோம்வொர்க்குகளை கொடுத்துள்ளார். விரைவில் அந்த கேரக்டருக்கு என்னை நான் தயார் செய்து கொள்வேன்' என்று கூறியுள்ளார்.
ராதாமோகன் படம் என்றாலே நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதை இருக்கும் என்பதால் மிஷ்கின், ராதாமோகன் ஆகிய இருவரின் இயக்கத்தில் அறிமுகமாவது தான்யாவுக்கு ஒரு நல்ல எண்ட்ரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.