close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த பட ஹீரோயின் இவர்தான்

Friday, March 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா நடித்து வரும் 'சீமராஜா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்து, 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழில் ஏற்கனவே வெளிவந்த 'ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் நாயகி ரகுல் ப்ரித்திசிங் தான் இந்த படத்தின் நாயகி என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.

24ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் முழு குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.