close
Choose your channels

'கபாலி'யின் தெலுங்கு ரிலீஸ் வியாபாரம் குறித்த தகவல்

Tuesday, June 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் கன்னட ரிலீஸ் உரிமையை 'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மிகப்பெரிய தொகை கொடுத்த பெற்றுள்ளார் என்ற செய்தி வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தெலுங்கு மாநில ரிலீஸ் உரிமை வியாபாரம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
'கபாலி' படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை 'ஷன்முகா பிலிம்ஸ்' ப்ரவீன் மற்றும் செளத்ரி ரூ.32 கோடி கொடுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் தமிழ், இந்தி, மலையாள ரிலீஸ் உரிமைகளின் வியாபாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்பட பலர் நடித்துள்ள 'கபாலி' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.