close
Choose your channels

பிரபல அரசியல்வாதியை எதிர்த்து போட்டியிடுகிறாரா ரஜினி, கமல் பட நடிகை.. பெரும் பரபரப்பு..!

Monday, February 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் நடித்த நடிகை பிரபல அரசியல்வாதியை எதிர்த்து வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தளபதி’ ’சிவா’ உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’எனக்குள் ஒருவன்’ ஆகிய படங்களில் நடித்தவர் ஷோபனா. இவர் நாட்டிய பேரொளி பத்மினியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமல் மட்டுமின்றி பாக்யராஜ் உடன் ’இது நம்ம ஆளு’ விஜயகாந்த் உடன் ’பாட்டுக்கு ஒரு தலைவன்’ சத்யராஜ் உடன் ’வாத்தியார் வீட்டு பிள்ளை’ உட்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் அதேபோல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி கரூர் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவரை எதிர்த்து நடிகை ஷோபனா திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்க இருப்பதாகவும் இதற்கு பாஜக தலைமை சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்ற சசிதரூரை எதிர்த்து போட்டியிடும் ஷோபனாவுக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.