close
Choose your channels

ஃபோர்ப்ஸ் நட்சத்திரங்கள் பட்டியல். ரஜினியை முந்தினார் ரஹ்மான்

Saturday, December 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2016ஆம் ஆண்டு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் உலகின் முன்னணி ஊடகமான ஃபோர்ப்ஸ் (Forbes) இந்தியாவின் 100 முன்னணி நட்சத்திரங்களை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் தென்னிந்தியாவை சேர்ந்த பல நடிகர், நடிகைகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலின் முதல் பத்து இடங்களில் தென்னிந்தியாவை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை என்றாலும் 13வது இடத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளார். 30வது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், 33வது இடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவும், 46வது இடத்தில் ஸ்ருதிஹாசனும், 47வது இடத்தில் தனுஷும், 49வது இடத்தில் உலக நாயகன் கமல்ஹாசனும் உள்ளனர். ரஜினியைவிட ஏ.ஆர்.ரஹ்மானு, கமல்ஹாசனை விட அவரது மகள் ஸ்ருதிஹாசனும் முன்னணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பட்டியலின் முதல் பத்து இடங்களை பெற்ற நட்சத்திரங்களின் பெயர்களை தற்போது பார்ப்போம்

1. சல்மான்கான்

2. ஷாருக்கான்

3. விராத் கோஹ்லி

4. அக்சயகுமார்

5. மகேந்திரசிங் தோனி

6. தீபிகா படுகோனே

7. சச்சின் தெண்டுல்கர்

8. பிரியங்கா சோப்ரா

9. அமிதாப்பச்சன்

10. ஹிருத்திக் ரோஷன்

மேலும் இந்த பட்டியலில் 51வது இடத்தில் சூர்யாவும், 53வது இடத்தில் காஜல் அகர்வாலும், 61வது இடத்தில் இளையதளபதி விஜய்யும், 72வது இடத்தில் சீயான் விக்ரமும், 90வது இடத்தில் பிரபுதேவாவும் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.