close
Choose your channels

'ஜெயிலர்' ரிலீசுக்கு 2 நாட்கள் முன் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு..!

Monday, August 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் பத்தாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் ரிலீசுக்கு இரண்டு நாள் முன்பு ரஜினிகாந்த் இமயமலை செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிந்த பிறகு இமயமலை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் மட்டும் அவர் இமயமலை செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து வரும் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அவர் நாளை இமயமலை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ’ஜெயிலர்’ திரைப்படத்தின் ரிலீஸ் போது அவர் சென்னையில் இருக்க மாட்டார் என்பது தெரியவந்துள்ளது.

இமயமலையில் சில நாட்கள் ஆன்மீக பயணம் மேற்கொண்ட பின் மீண்டும் சென்னை திரும்பும் ரஜினிகாந்த் அதன் பிறகு ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார் என்பதும் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.