close
Choose your channels

ஒரே நாளில் மோதும் விஜய்-சிவகார்த்திகேயன்.. ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..!

Monday, August 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து வரும் ’லியோ’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 21’ ஆகிய இரண்டு படங்களின் முக்கிய அப்டேட் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்துள்ள ’லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது நடந்து வருகிறது

இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அர்ஜுன் பிறந்த நாள் என்பதால் அவரது கேரக்டர் குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ’மாவீரன்’ வெற்றியை அடுத்து ’எஸ்கே 21’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் போஸ்டர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே விஜய்யின் ’லியோ’ மற்றும் சிவகார்த்திகேயனின் ’எஸ்கே 21’ ஆகிய இரண்டு படங்களின் அப்டேட்டுகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்பதால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.