close
Choose your channels

எம்ஜிஆர் பட பூஜைக்கு தலைமை தாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி

Wednesday, January 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் அதேபோல் வெளிநாட்டு காட்சிகளுடன் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி நடிக்க எம்ஜிஆர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்து தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகிவிட்டதால் அவரது அந்த கனவு நிறைவேறாமல் போனது

இந்த நிலையில் எம்ஜிஆரின் கனவை நிறைவேற்ற அவருடன் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த ஐசரிவேலனின் மகன் ஐசரி கணேஷ் முடிவு செய்துள்ளார். அவருடைய நிறுவனம் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் எம்ஜிஆரின் காட்சிகள் அனிமேஷனில் படமாக்கப்படவுள்ளது. அமெரிக்காவில் புகழ்பெற்ற அனிமேஷன் நிறுவனத்திடம் இதற்கான பணியை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்று எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' படத்தின் பூஜை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைமை தாங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் சென்னையில் கலந்து கொள்ளும் முதல் விழா இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.