close
Choose your channels

ரஜினியின் அடுத்த பட கெட்டப் இதுதானா?

Sunday, February 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளிவந்து உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் மழை பொழிந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ரஜினியின் '166'வது படமான இந்த படம் குறித்த அதிகாரபூர்வ செய்தி இன்னும் வெளிவரவில்லை என்றாலும் இந்த படம் குறித்த செய்திகள் அவ்வப்போது இணையதளங்களில் வந்து கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் 'ரஜினியின் 166' என்ற போஸ்டரை உருவாக்கி அதனை இணையதளங்களில் வைரலாக்கியுள்ளார். அச்சுஅசலாக அதிகாரபூர்வ போஸ்டர் போலவே உள்ள இந்த போஸ்டருக்கு ரஜினி ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். கண்களில் கருப்புக்கண்ணாடி, முகத்தில் வெள்ளைத்தாடி, வாயில் பீடியுடன் ரஜினியின் அட்டகாசமான ஸ்டைலில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.