close
Choose your channels

இனிமேல் அடிச்சிறேன்: கமல் முன் சிபி கேள்விக்கு பதில் சொன்ன ராஜூ!

Saturday, January 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் அருகில் நின்று கொண்டு சிபி கேட்ட ஒரு கேள்விக்கு இனிமேல் அடிச்சிறேன் என ராஜு பதில் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சிபி 12 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறினார் என்பதும் இன்றைய நிகழ்ச்சியில் அவர் கமல்ஹாசனுடன் விடைபெற்றுச் செல்லும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு செல்ல தயாராக இருக்கும் போட்டியாளர்களின் பிளஸ் மற்றும் மைனஸ் என்ன? என்று சிபியிடம் கமல் கேட்க, அதற்கு சிபி, ‘நிரூப் இறுதிப்போட்டிக்கு சென்றால் மிகவும் நல்லது என்றும், அதுவே அவரது ஆசை என்றும் ஆனால் இன்னும் கொஞ்சம் கெத்தாக இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய கருத்து என்றும் கூறினார்.

ராஜூ குறித்து சிபி கூறிய போது, ‘எந்த ஒரு பிரச்சனையையும் மிக எளிதாக தீர்த்துவிடும் திறமை ராஜூவிடம் இருக்கிறது என்றும், அதை ஒரு நல்ல குணமாக நான் பார்க்கின்றேன் என்றும், ஆனால் மனதில் உள்ளதை அவர் இன்னும் அடித்து சொன்னால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது என்று கூற, அதற்கு ராஜூ, இனிமேல் அடிச்சிறேன்’ என்று கூறும் காட்சிகளுடன் இன்றைய புரமோ வீடியோ முடிவு பெறுகிறது.

மொத்தத்தில் சிபி தற்போது இருக்கும் 6 போட்டியாளர்களின் நிறைகுறைகளை கூறும் காட்சிகள் இன்று சுவராஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.