close
Choose your channels

'புரூஸ் லீ'யில் ஒற்றுமையாகும் ஜி.வி.பிரகாஷ் - ராம்சரண் தேஜா

Saturday, August 29, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'டாலிங்' படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், சமீபத்தில் 'புரூஸ் லீ' என்ற படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக வந்த செய்தியை பார்த்தோம். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கவுள்ள இந்த படத்தில் நயன்தாரா நடிப்பாரா? நடிக்க மாட்டாரா? என்ற மாறுபட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் ஸ்ரீனு வைத்லா இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் தெலுங்கு படத்திற்கு தற்போது டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு படக்குழுவினர் 'புரூஸ் லீ' என்ற டைட்டிலை தேர்வு செய்து அந்த டைட்டிலுக்கு கீழே 'The Fighter' என்ற சப்டைட்டிலையும் தேர்வு செய்துள்ளனர்.

இந்த படத்தில் ராம்சரண் தேஜாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்தி சிங் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சிரஞ்சீவி மற்றும் இலியானா சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவர் நடிக்கும் படங்களின் டைட்டில் 'புரூஸ் லீ' என்று வைக்கப்பட்டிருந்தாலும் இரண்டுமே வெவேறு கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் என்றும் இரண்டு படங்களுக்கும் டைட்டிலில் மட்டுமே ஒற்றுமை உள்ளதாகவும் வேறு எந்த விதமான சம்பந்தமும் கிடையாது என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.