ரம்ஜான் ரிலீஸ் திரைப்படங்களின் 4 நாள் வசூல் நிலவரம்
கடந்த வெள்ளியன்று சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', ஜெயம் ரவியின் 'வனமகன்' மற்றும் அல்லு அர்ஜூன் நடித்த DJ என்று கூறப்படும் 'துவாடா ஜெகந்நதம்' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான சிம்புவின் 'AAA' திரைப்படம் கடந்த நான்கு நாட்களில் தமிழகத்தில் சுமார் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளது. கடந்த 4 நாட்களில் இந்த படம் சென்னையில் ரூ.1.35 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.2.2 கோடியும், கோவையில் ரூ.1.5 கோடியும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்தியாக இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் வசூல் படுவீழ்ச்சி அடைந்ததால் சிம்புவின் தோல்விப்பட வரிசையில் இந்த படம் துரதிர்ஷ்டமாக இணைந்தது.
ஜெயம்ரவியின் 'வனமகன்' எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் ஜெயம் ரவியின் வித்தியாசமான நடிப்பு, சாயிஷாவின் நடனம் ஆகிய பாசிட்டிவ்களுடன் ஓரளவு திருப்தியான வசூலை இந்த படம் பெற்றுள்ளது. கடந்த 4 நாட்களில் இந்த படம் தமிழகத்தில் ரூ.7.5 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.92 லட்சமும், செங்கல்பட்டில் ரூ.1.9 கோடியும், கோவையில் ரூ.1 கோடியும் இந்த படம் வசூல் செய்துள்ளது.
அதேபோல் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த 'துவாடா ஜெகந்நதம்' திரைப்படம் சென்னையில் எதிர்பார்த்தைவிட நல்ல வசூலை பெற்றுள்ளது. கடந்த நான்கு நாட்களில் இந்த படம் ரூ.1 கோடி சென்னையில் வசூல் செய்து விநியோகிஸ்தர்களை திருப்தி அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.