close
Choose your channels

மீண்டும் தில் ராஜூ தயாரிப்பில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனா.. ஹீரோ யார்?

Tuesday, May 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா வந்தனா நடித்த நிலையில் தற்போது தில் ராஜு தயாரிக்கும் அடுத்த படத்திலும் அவர்தான் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் என்பதும் அமிதாப்பச்சன் உடன் ’குட்பை’ மற்றும் அக்ஷய் குமார் உடன் ‘மிஷன் மஞ்சு’ ஆகிய பாலிவுட் திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. மேலும் ரன்பீர் கபூருடன் நடித்த ’அனிமல்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தில் ராஜு மற்றும் ஏக்தா கபூர் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய பாலிவுட் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஹீரோ குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ஆனால் இந்த படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.