close
Choose your channels

ரெடின் கிங்ஸ்லி பிறந்தநாள்.. மனைவி சங்கீதாவின் எமோஷனல் போஸ்ட்..!

Friday, December 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனல் பதிவு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ரெடின் கிங்ஸ்லி, நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். மைசூரில் அவர்கள் திருமணம் எளிமையாக நடந்தது என்பதும் திருமணத்தை முடித்துவிட்டு தம்பதிகள் மாலத்தீவு, துபாய் போன்ற நாடுகளுக்கு ஹனிமூன் சென்றதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் ஹனிமூன் முடித்து விட்டு சென்னை திரும்பிய பிறகு பிரமாண்டமாக ரிசப்ஷன் நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ரெடின் கிங்ஸ்லி தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் சங்கீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

உங்களை மறக்கவே முடியாது: என்னுடைய பார்ட்னரான உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். ஒரு கணவராக நீங்கள் தரும் அன்பையும் பாசத்தையும் என்னால் என்றும் மறக்க முடியாது. இதுபோன்ற இன்னும் பல பிறந்தநாள்கள் கொண்டாட வாழ்த்துகிறேன். எனது அன்பு, அமைதி என அனைத்துக்குமே நீங்கள் தான் காரணம் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.