close
Choose your channels

'ரெமோ' இயக்குனர் அடுத்த படத்தில் இந்த நடிகர் ஹீரோவா? ஆச்சரிய தகவல்..!

Monday, January 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் சுமார் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 52 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் அதன் பிறகு கார்த்தி நடித்த ’சுல்தான்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா நாயகனாக நடிக்க இருப்பதாகவும் இது முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைக்கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது

’இந்தியன் 2’, ‘கேம் சேஞ்சர்’, ‘டி50’ ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’ போன்ற படங்களில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் அவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். கடந்த 2000ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே அவர் ஹீரோவாக பல படங்களில் நடித்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.