close
Choose your channels

சூர்யாவின் 'எஸ் 3' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

Thursday, January 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கியுள்ள 'எஸ் 3' திரைப்படம் இம்மாதம் 26ஆம் தேதி வெளிவரவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. சிங்கம், சிங்கம் 2 படங்களின் வெற்றிக்கு பின்னர் வெளியாகவுள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம், வர்தா புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் தற்போது ஜனவரி 26-ல் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூர்யாவின் 'எஸ் 3' திரைப்படம் சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 155 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது

சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.