close
Choose your channels

எனது அடுத்த படத்தை இயக்குபவர் தமிழ் இயக்குனர் தான்.. ரிலீஸ் தேதியையும் அறிவித்த சல்மான்கான்..!

Wednesday, March 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது அடுத்த படத்தை தமிழ் இயக்குனர் தான் இயக்க இருப்பதாக கூறியதோடு அந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் தற்போதே அவர் அறிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் தனது அடுத்த படத்தை தமிழ் திரைப்பட இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மிகச்சிறந்த இயக்குனரான ஏஆர் முருகதாஸ் அவர்களுடன் இணைவதில் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த படத்தை சஜித் நாடியவாலா என்பவர் தயாரிக்க இருப்பதாகவும் சல்மான்கான் அறிவித்துள்ளார். இந்த கூட்டணி தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும் இந்த படத்தின் பயணத்திற்காக தான் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் 2025 ஆம் ஆண்டு ரம்ஜான் விடுமுறையின் போது வெளியாகும் என்றும் அவர் ரிலீஸ் தேதியையும் அதில் குறிப்பிட்டுள்ளார்

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 23’ படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் சல்மான் கான் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாலிவுட்டில் அமீர்கான் நடித்த ’கஜினி’ என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி படமாக்கிய ஏஆர் முருகதாஸ் அவர்களுக்கு தற்போது மீண்டும் பாலிவுட் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றி படத்தை அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.