close
Choose your channels

சமந்தாவின் சிலம்பாட்ட ரகசியம் இதுதான்!

Friday, April 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை சமந்தா இன்று தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமந்தா சிலம்ப பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததை பார்த்தோம்.

இந்நிலையில் இந்த சிலம்பு பயிற்சியை எதற்காக சமந்தா பயின்றார் என்ற ரகசியம் இன்று வெளியாகியுள்ளது. 'வேலைக்காரன்' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ரான் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் சமந்தா தான் நாயகி என்பது தெரிந்ததே. இந்த படத்தில் சமந்தாவுக்கு சிலம்பம் காட்சிகள் இருப்பதாகவும் அதற்காக அவர் கடந்த பத்து மாதங்களாக சிலம்ப பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை 24ஏஎம் ஸ்டுடியோ நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கம் உறுதி செய்துள்ளது.

கோலிவுட் திரையுலகில் ஹீரோக்கள் போலவே தற்போது ஹீரோயின்களும் தங்கள் கேரக்டருக்கு தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு டூப் இல்லாமல் நடித்து வருவது சினிமா ஆரோக்கிய நிலையை நோக்கி செல்வதையே காட்டுகிறது. பாகுபலி படத்திற்காக அனுஷ்கா, தமன்னாவின் குதிரையேற்றம், வாள் சண்டை பயிற்சிகள், சங்கமித்ரா படத்திற்காக ஸ்ருதிஹாசன் வாள் சண்டை பயிற்சி செய்வது, தற்போது சமந்தாவின் சிலம்ப சண்டை பயிற்சி ஆகியவைகளே இதற்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.