close
Choose your channels

ரஜினி-ரஞ்சித் படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல இயக்குனர்

Thursday, May 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கும் 'ரஜினி 161' படத்தின் நாயகி ஹூமா குரேஷ் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'விசாரணை' படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்ற சமுத்திரக்கனி, ரஜினிகாந்த் மற்றும் ரஞ்சித் படத்தில் முதன்முதலில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 'பாகுபலி 2' படத்தின் VFX டெக்னீஷய்ன் பீட்டர் டிராப்பர் அவர்களும் இந்த படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 28ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.