close
Choose your channels

'எமலோகம்' முடிந்து 'பூலோகம்' திரும்பிய யோகிபாபு

Monday, January 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் படங்களில் ஒன்று 'தர்மபிரபு'. இந்த படத்தில் எமதர்மனாக ராதாரவியும், எமதர்மனின் மகனாக யோகிபாபுவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சித்திரகுப்தன் கேரக்டரில் கருணாகரன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு எமலோகம் போன்று போடப்பட்டிருந்த பிரமாண்டமான செட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முதல்கட்ட எமலோக படப்பிடிப்பு முடிந்து இன்றுமுதல் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது. இதில் பூலோகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படப்பிடிப்பு 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என தெரிகிறது

யோகிபாபு, கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை முத்துகுமரன் இயக்கி வருகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.