close
Choose your channels

அடுத்த கட்டத்திற்கு செல்லும் சிவகார்த்திகேயனின் 'சீமராஜா'

Tuesday, May 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயனின் சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தபோதிலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் இந்த படத்தின் அனைத்து பணிகளும் இரவுபகலாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங்  வரும் 15ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. முதல்கட்டமாக சிவகார்த்திகேயன் தனது பகுதி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் செய்வார் என்றும், அதனையடுத்து சமந்தா உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகளின் கேரக்டர்களுக்கு டப்பிங் செய்யப்படும் என தெரிகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய வெற்றி படங்களை அடுத்து மீண்டும் இணைந்துள்ள சிவகார்த்திகேயன், பொன்ராம் கூட்டணி, இந்த படத்தையும் வெற்றிப்படமாக உருவாக்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தின் பாடல்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.