close
Choose your channels

தந்தை படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள்.. மீண்டும் ரூ.1000 கோடி வசூல் கிடைக்குமா?

Tuesday, April 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகரின் திரைப்படம் கடந்த ஆண்டு 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆன நிலையில் அவருடைய அடுத்த படத்தில் மகள் அறிமுகமாக இருப்பதாகவும் இந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டு ’ஜவான்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அட்லியின் இயக்கத்தில் உருவான இந்த படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது.

இந்த நிலையில் அடுத்ததாக ஷாருக்கான் ’கிங்’ என்ற படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சுஜாய் கோஷ் என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிகையாக அறிமுகமாக இருப்பதாகவும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் தந்தை மகள் ஆகிய இருவரும் படம் முழுவதும் ட்ராவல் செய்யும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஷாருக்கான் இந்த படத்தில் டான் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவர் நீளமான தலைமுடி மற்றும் தாடி வளர்க்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.