close
Choose your channels

கொடூரா வில்லனாக மாதவன்.. ஜோதிகாவை உலுக்கி எடுக்கும் காட்சிகள்:  'சைத்தான்' டிரைலர்...!

Thursday, February 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜய் தேவ்கன், ஜோதிகா மற்றும் மாதவன் நடித்த ’சைத்தான்’ என்ற பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீஸ்-க்கு தயாராகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையத்தில் வருகிறது.

அஜய் தேவ்கான், ஜோதிகா தம்பதிகள் தங்களது மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த வீட்டிற்கு வருகிறார் மாதவன். அவர் 15 நிமிடத்தில் வீட்டை விட்டு சென்று விடுவேன் என்று கூறிய நிலையில் மணிக்கணக்கில் தங்கி இருந்து ஜோதிகா மகளை ஒரு அடிமை போல் நடத்துகிறார்.

மாதவன் சொல்வதுபோல் அஜய் தேவ்கன் - ஜோதிகா மகள் நடந்து கொள்ள என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருக்கும் அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகா, மாதவனை விரட்ட என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை என தெரிகிறது.

கொடூர வில்லனாக மாதவன் நடித்திருக்க அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் மகளை காப்பாற்றும் தம்பதிகளாக நடித்துள்ளனர். டிரைலரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் த்ரில்லாக இருக்கும் நிலையில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விகாஸ் பாகி இயக்கத்தில் அமித் திரிவேதி இசையில் உருவாகிய இந்த படம் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.