close
Choose your channels

மீண்டும் ஷங்கர் - விக்ரம் படம்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?

Wednesday, August 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா நடிப்பில் உருவான ’அந்நியன்’ திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் 57 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது என்பதும், இந்த படத்திற்கு சிறந்த ஸ்பெஷல் எபெக்ட் பணிகளுக்காக தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை 4கே வெர்ஷனில் மீண்டும் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் புத்தம்புது பொலிவுடன் 4கே வெர்ஷனில் ’அந்நியன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் கமல்ஹாசனின் ’வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் 4கே வெர்ஷனில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதேபோல் ’அந்நியன்’ திரைப்படமும் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.