close
Choose your channels

விருதுகளை அள்ள காத்திருக்கும் விஜய்யின் 'மெர்சல்'

Thursday, August 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியான 'மெர்சல்' திரைப்படம் ஏற்கனவே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு பல விருதுகளையும் அள்ளியுள்ளது. இந்த படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்ததுடன், விரைவில் சீன மொழியிலும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டின் 'சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருதுகள்' என்று கூறப்படும் SIIMA விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் துபாயில் நடைபெறவுள்ளது. 

தென்னிந்திய திரையுலகமே கூடும் இந்த விருது வழங்கும் விழாவில் விஜய்யின் மெர்சல் திரைப்படம் 12 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த வில்லன், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பாடகி, சிறந்த பாடகர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் சிறந்த பாடகர் விருதுக்கு மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான், சித் ஸ்ரீராம் ஆகிய இருவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் 12 விருதுகளுக்கு இந்த படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் எத்தனை விருதுகளை 'மெர்சல்' அள்ள போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இதேபோல் விஜய்சேதுபதி, மாதவன் நடித்த 'விக்ரம் வேதா' திரைப்படம் 9 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.