close
Choose your channels

பிரபல நடிகருக்காக குத்துப்பாட்டு பாடிய சிம்பு

Thursday, June 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு நடிப்பில் மட்டுமின்றி இசையிலும் நல்ல ஆர்வம் உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் நடித்த படங்களில் பாடுவது மட்டுமின்றி தனிப்பாடல்களின் தொகுப்பையும் அவ்வப்போது அவர் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் ஒருசில ஹீரோக்களுக்காகவும் பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'புரூஸ்லீ' படத்திற்காக ஒரு குத்துப்பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்த பாடல் சூப்பராக வந்திருப்பதாகவும் படத்தின் ஹைலைட்டாக இந்த பாடல் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ், க்ரிதி கார்பனந்தா, ராஜேந்திரன், பாலசரவணன், ஆனந்த்ராஜ், மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'புரூஸ்லீ' படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். கெனன்யா பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.