close
Choose your channels

சிம்புவின் 'பத்து தல' ஆடியோ ரிலீஸ்.. அதிகாரபூர்வ அறிவிப்பு

Wednesday, March 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’பத்து தல’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கின என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக நினைவிருக்கா? என்ற பாடல் வெளியாகி வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது சமூகவலை பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ’பத்து தல’திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியின் போது இசைப்புயல் ஏஆர் ரகுமான் சில பாடல்களை மேடையில் பாடுவார் என்றும் கூறப்படுகிறது.

சிம்பு நடித்த ’மாநாடு’ மற்றும் ’வெந்து தணிந்தது காடு’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் ’பத்து தல’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.