close
Choose your channels

ஓடிடியில் சிம்புவின் 'பத்து தல': எந்த ஓடிடியில்? எப்போது?

Saturday, April 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் உருவான ’பத்து தல’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் உலகம் முழுவதும் 55 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற ’பத்து தல’ திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி ’பத்து தல’ திரைப்படம் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இந்த தகவலை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் கலையரசன், சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கிருஷ்ணா இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.