close
Choose your channels

'சிம்பு 48' படத்தின் லுக் இதுதானா?  மாஸ் புகைப்படம் வைரல்..!

Friday, July 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சிம்பு 48’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கு உடலளவில் தயாராவதற்காக சிம்பு சமீபத்தில் வெளிநாடு சென்று இருந்தார் என்றும் அங்கு அவர் மார்ஷியல் கலைகள் பயின்று வருவதாகவும் கூறப்பட்டது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படம் படப்பிடிப்பிற்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு சமீபத்தில் மலேசியா சென்றதாகவும் அங்கு அவர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மலேசிய விமான நிலையத்தில் சிம்பு நடந்து செல்லும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அதில் உள்ள சிம்புவின் மாஸ் லுக்கை பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இதுதான் ’சிம்பு 48 ’படத்தின் லுக் ஆக இருக்கும் என்று கூறப்படுவதால் இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.