close
Choose your channels

நீங்கள் தான் நடன சூப்பர் ஸ்டார்: அஜித், விஜய் நாயகிக்கு குவியும் பாராட்டுக்கள்

Wednesday, February 26, 2020 • தமிழ் Comments

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, விஜயகாந்த், சரத்குமார், உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் சமீபத்தில் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் மீண்டும் நடித்தார்.

இந்த நிலையில் சிம்ரன் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவருடைய புயல்வேக நடனம் தான். கதாநாயகியாக நடித்த படங்களில் மட்டுமின்றி ‘யூத்’, ‘பிதாமகன்’ போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் சிம்ரன் நடனப் பள்ளியில் பயிற்சி எடுப்பது போன்ற வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ‘நடனம் உங்கள் கவலைகளை போக்கச் செய்யும். நடனத்தோடு ஒன்றி ஆடும்போது அதன் இசையில் மூழ்கி உடல் தானாக வலைந்து கொடுக்கும்” என்று சிம்ரன் குறிப்பிட்டுள்ளார்.

சிம்ரனின் இந்த நடன வீடியோவை பார்த்த ரசிகர்கள், ‘நீங்கள் ஒரு நடன சூப்பர் ஸ்டார்’, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வாருங்கள், குறைந்தபட்சம் பாடலுக்கு நடனம் ஆடவாவது வாருங்கள்’ என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சிம்ரன் மீண்டும் களத்தில் இறங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Get Breaking News Alerts From IndiaGlitz