close
Choose your channels

முடிந்தது 'சிந்துபாத்' வியாபாரம்: விரைவில் ரிலீஸ் தேதி

Wednesday, May 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் அருண்குமார் இயக்கிய 'சிந்துபாத்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் தற்போது ரிலிசுக்கு தயாராக உள்ளது. ஆனால் இந்த படத்தின் வியாபாரத்தில் சிக்கல் இருப்பதால் இந்த படம் வெளியாக தாமதமாகும் என ஒரு வதந்தி கடந்த சில வாரங்களாக இருந்தது.

ஆனால் வதந்திகளை உடைத்து தற்போது இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கிளாப் போர்டு புரடொக்சன்ஸ் சத்தியமூர்த்தி என்பவர் பெற்றுள்ளார்., இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

விஜய்சேதுபதி, அஞ்சலி, லிங்கா, விவேக் பிரசன்னா மற்றும் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை 'பண்ணையாரும் பத்மினியும்' மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கே புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.