close
Choose your channels

சிவகார்த்திகேயனின் முதல் இரண்டாம் பாக திரைப்படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Tuesday, January 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. தற்போது கூட ‘இந்தியன் 2’ உள்பட ஒரு சில இரண்டாம் பாகம் திரைப்படங்கள் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் முதல் முதலாக சிவகார்த்திகேயன் நடித்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’அயலான்’ என்ற திரைப்படம் சமீபத்தில் பொங்கல் விருந்தாக வெளியானது. இந்த படம் 50 கோடி வசூல் என்ற சாதனையை செய்து அதற்கு மேலும் தற்போது தொடர்ந்து வசூல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிபுரிந்த PhantomFX என்ற நிறுவனம் தற்போது ’அயலான்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயனின் முதல் இரண்டாம் பாகம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’அயலான்’ படத்தை தயாரித்த கேஜேஆர் ஸ்டூடியோ மற்றும் PhantomFX நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. முதல் பாகம் போகவே இரண்டாம் பாகத்திலும் கிராபிக்ஸ் பணிகள் அபாரமாக இருக்கும் என்றும் ரசிகர்களை கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.