close
Choose your channels

ஹாலிவுட் பாணியில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

Thursday, February 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரித்திசிங் நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் கதை இதுவரை ஹாலிவுட்டில் மட்டுமே எடுக்கப்பட்ட வேற்றுகிரகத்தினர் குறித்த கதை என்றும், வேற்றுகிரகத்தினர் பூமிக்கு வந்ததால் ஏற்படும் ஆபத்தை சிவகார்த்திகேயன் குழுவினர் தடுப்பது எப்படி என்பதுதான் கதை என்றும் கூறப்படுகிறது. முதன்முதலாக தமிழில் பிரமாண்டமான ஒரு வேற்றுகிரக கதை உருவாகவுள்ளதை அடுத்து இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.