close
Choose your channels

ஒரே ஒரு லவ், அதுக்கு வேர்ல்ட் வாரே வந்துடும்போல.. 'பிரின்ஸ்' படத்தின் அட்டகாசமான டிரைலர்!

Monday, October 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ’பிரின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன் எப்போதும் இல்லாத வகையில் சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ்’ படம் ரிலீஸுக்கு முன்னரே தயாரிப்பாளருக்கு லாபத்தை தரும் அளவிற்கு மிகப் பெரிய வியாபாரம் நடந்துள்ளது என்பது ஆச்சரியத்திற்குரிய செய்தி ஆகும்.

இந்த நிலையில் ’பிரின்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் தற்போது டிரைலர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலரில் இருந்து இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ஆசிரியராக நடித்துள்ளார் என்பதும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் மரியா உடன் காதல் ஏற்படுகிறது என்பதும் இந்த காதலால் ஏற்படும் பிரச்சனை என்ன? அந்த பிரச்சனையை சிவகார்த்திகேயன் எப்படி சமாளிக்கின்றார் என்பதை நகைச்சுவையுடன் இயக்குனர் அனுதீப் இந்த கதையை கூறியுள்ளார் என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

சிவகார்த்திகேயன் வழக்கம் போல் காமெடி மற்றும் ரொமான்ஸ் நடிப்பில் அசத்தி உள்ளார் என்பதும் தன்னுடைய காதலுக்காக அவர் செய்யும் விஷயங்கள் காமெடியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் நாட்டின் நடிகை மரியா அழகு தேவதையாக இந்த படத்தில் வலம் வருகிறார். சத்யராஜ் இந்த படத்தில் ஒரு முக்கிய சமூக பிரச்சனையை அலசும் கேரக்டரில் நடித்துள்ளார். மொத்தத்தில் சிவகார்த்திகேயனின் ஹாட்ரிக் வெற்றி படமாக ’பிரின்ஸ்’ படம் அமைய இருப்பது டிரைலரின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.