close
Choose your channels

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

Thursday, February 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் தற்போது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது

இந்த நிலையில் வரும் 18ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை அவருடைய ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். தனது ரசிகர்களுக்கு பிறந்த நாள் அன்று இன்ப அதிர்ச்சி தரும் வகையில் அவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தின் டைட்டிலை 17ஆம் தேதி நள்ளிரவு சரியாக 12 மணிக்கு அறிவிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது. இந்த படத்தின் டைட்டில் 'சீமராஜா' என்ற வதந்தி இணையதளங்களில் பரவி வந்தபோதிலும், டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.