close
Choose your channels

சிவகார்த்திகேயன் - பொன்ராம் படத்தின் மொத்த டீம் இதுதான்

Saturday, August 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய வெற்றி படங்களை அடுத்து மூன்றாவது முறையாக பொன்ராம்-சிவகார்த்திகேயன் கூட்டணி விரைவில் இணைகிறது. இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், சமந்தா நாயகியாக நடிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் முழு டீம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படத்தில் வழக்கம்போல காமெடி நடிகராக சூரி நடிக்கவுள்ளார். அதேபோல் டி.இமானும் மூன்றாவது முறையாக இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு பால்சுப்பிரமணியம் ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பும் செய்கின்றனர்.
மேலும் இந்த படத்திற்கு கவிஞர் யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார். இவர் 'ரஜினிமுருகன்' படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. டி.முத்துராஜ் கலை இயக்குனராகவும், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசும் பணிபுரியவுள்ள இந்த படத்திற்கு போஸ்டர் டிசைன் செய்கிறார் டியூனி ஜான்.
24ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 4வது படமான இந்த படம் வரும் 2017அம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.