close
Choose your channels

'ரஜினிமுருகன்' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, December 11, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு முன்பதிவும் தொடங்கியது. இந்நிலையில் திடீரென சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.


இந்நிலையில் 'ரஜினிமுருகன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் இன்றைய தினசரிகளிலும், இணையதளங்களிலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை அடுத்து இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.